search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் டிரைவர் கைது"

    • முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.

    பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.

    தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தாள் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33) சாத்தூர் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 27). இவர் வீட்டின் அருகே பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். மனைவி அங்காள ஈஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அங்காள ஈஸ்வரி சமையல் வேலைகளை முடித்துவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேறு அறையில் இருந்த கருப்பசாமி சமையலறைக்கு வந்து மனைவியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். வாக்குவாதத்தை தவிர்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு வெளியே செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய கருப்பசாமி அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதில் அங்காள ஈஸ்வரியின் மனுக்கட்டு முழங்கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனால் கருப்பசாமி அரிவாளுடன் அவரை துரத்திச் சென்றார் அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கருப்பசாமி வீட்டு நூல் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் அங்காள ஈஸ்வரியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அங்காள ஈஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×