பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Published on

ஈரோடு:

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(32). இவர் ஈரோடு-மொடக்குறிச்சி வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வந்தார்.

அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி அவரது பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமேஷ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் ரமேஷ் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் பவானி பகுதியில் ரமேஷ் மற்றும் மாணவி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் ரமேஷ் மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com