கல்லூரி மாணவி கடத்தல்

கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி கடத்தல்
Published on

விருதுநகர்

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com