search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning work"

    • தாமிரபரணி ஆற்று பாசனத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்று பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் இரண்டு அணைக்கட்டுகளும், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் இடது புறத்திலிருந்து வடகால் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வடகால் பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 19.25 கி.மீ. ஆகும். வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த வடகால் வாய்க்காலில் எல்.எஸ்.0 மீட்டர்முதல் 15 கிமீ வரை மண் திட்டுக்களும் காட்டுச்செடிகளும் அதிகளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்வது இடையூறாக இருந்து வருகிறது.

    ஸ்ரீவைகுண்டம் பகுதி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வடகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்து தரவேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

    இதன்படி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மங்களகுறிச்சியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தாமிரபரணி நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஏரல் தாசில்தார் கண்ணன், பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தூர் வாரும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் ஸ்ரீவைகுண்டம், வரதராஜபுரம், கீழ்பிடாகை கஸ்பா, மங்கலகுறிச்சி, சிறுத்தொண்டநல்லூர், கொட்டாரக்குறிச்சி, இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், அகரம், மஞ்சள் நீர்க்காயல், கொற்கை, வாழவல்லான், சாயர்புரம், திருப்பணி செட்டிக்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், உதவி பொறியாளர் பாஸ்டிங் வினு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சிவகளை பிச்சையா, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி, வட்டார செயலாளர் நிலமுடையான், வட்டார துணைத்தலைவர் அமச்சார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சொரிமுத்து, ஊடக பிரிவு பொறுப்பாளர் மரியராஜ், திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், மற்றும் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் குப்பைகள் அகற்றப்பட்டது.
    • மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

    தூத்துக்குடி:

    உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில், தூய்மை பணியாளர்கள் கல்லூரி மாணவ -மாணவிகள் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் மெகா தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    28 டன் குப்பை அகற்றம்

    தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் கடற்கரையோர பகுதிகளில் கிடந்த பாலிதீன் பேப்பர்கள்,பிளாஸ்டிக் கழிவுகள், சேதமாகி பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகள்,கயிறுகள், பேப்பர் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆலோசனையின்படி இதில் ஈடுபட்ட மாநகர நகர்நல அலுவலர் அருண் குமார்,உதவி ஆணையர் தனசிங்,சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்யநாதன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, பவானிமார்ஷல் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர்,பொதுச்சேவை நண்பர்கள் குழுவினர், அஜித் நற்பணி மன்றத்தினர், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் என 500-க்கும் மேற்பட்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

    நிகழ்ச்சியின்போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைவசதிகளை முழுமையாக செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே 100 சதவீதம் மிகத் தூய்மை யான,சுத்தமான மாநகராட்சி தூத்துக்குடி என கூறும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் பூங்கா,பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மாநராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கிளினீங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதோடு பொது இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதை தவிர்த்திட நவீன வடிவிலான குப்பை தொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து போடவேண்டும். இந்த நேரத்தில் மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலு–மாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த தடை செய்யப்பட்ட பொரு ட்களின் பயன்பாடு பொது மக்களிடத்தில் இன்னும் குறையாமலே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே, வணிகர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுகாதாரமான குப்பை இல்லாத மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரியலூரில் அரசு கலை கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் கீழ் தூய்மை பணி தொடங்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூரில் அரசு கலை கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் கீழ் தூய்மை பணி தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    குப்பைகளை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளை தூய்மையாக பராமரிப்பதுபோல், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

    வருகிற தலைமுறையை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி முழுவதும் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடற்கரை முழுவதும் இருந்த குப்பைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, புனித வள்ளலார் கலைக் கல்லூரி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எனது குப்பை எனது பொறுப்பு அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவரணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா ரங்கநாதன், செந்தில் குமாரி இளந்திரையன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
    • வீட்டில் உள்ள கழிவு நீரை வீட்டுத் தோட்டத்திலேயே பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    பாளை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் தங்கபாண்டியன், துணை தலைவர் முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் கோவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

    வீட்டில் உள்ள கழிவு நீரை வீட்டுத் தோட்டத்திலேயே பயன்படுத்த வேண்டும். அல்லது வீட்டில் உறிஞ்சி குழி அமைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பை களை கொட்டுவதை நிறுத்த வேண்டும்கூ.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்நிலைகளில் தூய்மை பணி முகாம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஒட்டன்குளம் மற்றும் நல்லா னூரணி பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கார்த்திக் வரவேற்றார். செயல் அலுவலர் சண்முகம், மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் ஆகியோர் பேசினார்.

    சுகாதார பணியாளர்கள் ஒட்டாங்குளம், நல்லானூரணி பகுதி மற்றும் குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள், பாலீதின் பைகளை அகற்றி துப்புரவு பணிசெய்தனர். அதன்பின் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து கொடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து மஞ்சள் பைகளை வழங்கினர்.

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு, நம் தூய்மை நகரத்தூய்மை'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார பணி மேற்பார் வையாளர் திலீபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

    • கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.
    • தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் நடைபெற்றது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.

    பேரூராட்சி செயலாளர்கள் கரு.சண்முகம் இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், 3-வார்டு கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வன் 9-வார்டு பி.ரவி முன்னாள் வார்டு கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் கோவில் வளாகம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி வளாகம், அனைத்து வீதிகளும் தூய்மை பணி கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்தல், தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    இதில் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் வரி தண்டலர்கள் செல்வராஜ், கோகிலா, டிரைவர்சுகுமார், எலக்ட்ரீசியன் சின்னத்தம்பி, கணினி பணியாளர் கார்த்தி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி பேரூராட்சி சார்பில் நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    • சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் பணி நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கியது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டரின் அறிவுரைக்கு ஏற்ப சிங்கம்புணரி வண்ணான் குண்டு, வெட்டியான் குண்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    நீர்நிலை பகுதிகளை கரையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடப்பட்டன. அதை தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் திருமாறன், அப்துல்லா, ஷாஜகான், ஜெயக்குமார், மணி சேகரன் மற்றும் பொதுமக்களும், பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்களும் சேவுக அரிமா சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். செயல் அலுவலர் ஜான் முகமது நன்றி கூறினார்.

    • கொடைக்கானல் கீழ்மலை ப்பகுதி பண்ணைக்காடு பேரூராட்சியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ப்பகுதி பண்ணைக்காடு பேரூராட்சியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    இதில் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலு வலர் சகாய அந்தோணி யூஜின் முன்னிலை வகி த்தார். துணைத் தலைவர் லதா ராஜேந்திரன் வர வேற்று பேசினார்.

    பின்னர் தாண்டிக்குடி செல்லும் மெயின் ரோடு பகுதியில் உள்ள தெப்ப க்குளம் மற்றும் அருகே உள்ள ஓடைகள் உள்ளிட்ட நீர் நிைலகளில் குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் நீர்வழி பாதைகளில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டன.

    தண்ணீர் வரும் நீர் வழிப்பாதைகளில் குப்பைகளை மற்றும் கழிவு பொருட்களை கொட்ட க்கூடாது என்று பொது மக்களிடம் வலியுறுத்த ப்பட்டது. இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது.
    • மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியது. நேற்று மாவட்டத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அதேபோல் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளை, ராதாபுரம், வள்ளியூர் பகுதியிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 4 மண்டல பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மேலப்பாளையம் பகுதி முழுவதும் உள்ள தெருக்களில் இன்று கிருமிநாசினி தெளித்தனர்.

    • சிறப்பு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    போளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    போளூர் பேரூராட்சியில் செயற்பொறியாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சியின் செயலாளர் முகமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். போளூர் பேரூராட்சியின் தலைவர் ராணி சண்முகம் கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இந்தத் தூய்மை பணி ரத ஊர்வலம் போளூர் முக்கிய வீதிகள் வழியாக பஜார் வீதி செந்தாரப்பட்டி தெரு பஸ் நிலையம் போன்ற வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அடைந்தது.

    பின்னர் பேரூராட்சியின் திட்டக் குழு மேலாண்மை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

    இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தூய்மைப்பணி குறித்து மாணவிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், ரங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×