search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன வாய்க்கால்"

    • ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என்றனர்.
    • இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அம்மாபேட்டை வட்டத்தில் நெடுந்தெரு பகுதியில் தேவரா யன்பேட்டை வாய்க்கால், காவளூர் பகுதியில் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் வெட்டாற்றை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

    அப்போது கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 1068 கி.மீ. நீளத்துக்கு 189 பணிகள் தூர்வாருவதற்காக எடுத்து கொள்ளப்பட்டது. இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவைகேற்ப பொக்லைன் எந்திரங்கள் அதிகரிக்கப்படும்.

    மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியா ளர்கள் செல்வபாரதி, சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • வாய்க்கால்கள் மூலமும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.
    • தலைமை நில அலுவலர் செல்வன் ஆகியோர் அளவீட்டுப் பணிகள் மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அமராவதி ஆற்றின் மூலம் பழைய ஆயக்கட்டு நிலங்களும், பிரதான கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு நிலங்களும் பாசனம் பெறுகின்றன. அத்துடன் ராஜவாய்க்கால்கள், ராமகுளம், கல்லாபுரம் உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலமும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.

    பிரதான வாய்க்காலில் இருந்து கிளைக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் பல இடங்களில் நீர் திருட்டு நடைபெறுவதால் கடை மடைக்கு தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் பாசன வாய்க்கால்களுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி ,மலையாண்டிபட்டினம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் அளவீட்டுப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மடத்துக்குளம் தாசில்தார் செல்வி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் தலைமை நில அலுவலர் செல்வன் ஆகியோர் அளவீட்டுப் பணிகள் மேற்கொண்டனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ரோந்து மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் வாய்க்காலின் இரு கரைகளிலும் பாதைகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் விரயமாவதைத் தடுக்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கடை மடை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×