என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருசூக ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டினை மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் கலெக்டர் ஆய்வு
- ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
- துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.






