search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப்பணி"

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்;

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீப தரிசனம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் கிரிவல பாதையை இன்று காலை தூய்மை அருணை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    தூய்மை அருணை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா. ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட தூய்மை அருணை உறுப்பினர்கள், அனைத்து துறை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது.
    • ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.

    எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத்தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

    நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
    • பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

    உடுமலை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் முன்னிலை வகித்தார். ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர்.

    அப்போது பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார். 

    • பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள்.
    • ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டப்படி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபடும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

    இதை பா.ஜனதாவினர் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டனர். சென்னையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.

    பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள். பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

    மடிப்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் பூங்கா, அம்பத்தூர் பகுதிகளில் நடந்த பணிகளில் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றார்.

    அண்ணா நகரில் மாவட்ட தலைவர் தனசேகர், மகளிரணி லதா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் சதீஷ் தலைமையில் திரு.வி.க. நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்.

    ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.

    இதே போல் நகரம் முழுவதும் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார்.
    • நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும். நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும்.

    ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

    அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

    • ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.

    • 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஷ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன், ரோடு ஸ்வீப்பிங் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என்றனர் .

    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.

    திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
    • தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
    • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

    இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

    17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    சோழவந்தானில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட பேரூராட்சிகள் நிர்வாகத்தினர் பல்வேறு வகையில் தூய்மை பணி குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.  

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக துப்புரவு பணிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாடு ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரம் தயாரிக்கும் வழிமுறை, கழிவுநீர் கால்வாய் பயன்படுத்தும் முறை என விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர். 

    முக்கிய வீதிகளில் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், செல்வராணி ஜெயராமன், குருசாமி, முத்துசெல்வி தலைமையில் சுகாதார தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில், சமூக ஆர்வலர்கள் நாகேந்திரன், கண்ணன், மாரிமுத்து, முத்துபாண்டி ஆகியோரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    துப்புரவு மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணி செய்து பிரசாரம் செய்தனர். பேரூராட்சி செயலர் சுதர்சன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ஆலோசனையின் பேரில் தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
    ×