search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் நாளை தூய்மைப்பணி
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகரில் நாளை தூய்மைப்பணி

    • திருப்பூர் மாநகராட்சியின் பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி நாளை 12.11.2022 அன்று திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை,மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியபகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.

    மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் ,விளம்பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள் தெருக்களின் பெயர்ப் பலகைகள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×