search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur city"

    • குழாய் பாதை பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது.
    • 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர்விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம்செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் பாதை நீர்க்கசிவு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் 28.4.2023 மற்றும் 29.4.2023 ஆகிய 2 நாட்கள் (வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை) இரண்டாவது குடிநீர்திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே திருப்பூர் மாநகராட்சியில் வார்டு 51-56 மற்றும் மண்டலம் 4-க்குட்பட்ட வார்டு 55 மற்றும் 52 ஆகிய பகுதிகளில் 29.4.2023 மற்றும் 30.4.2023 ஆகிய 2 நாட்கள் (சனிக்கிழமை மற்றும்ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 1.5.2023 முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனதிருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
    • மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்

     திருப்பூர்  :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏம்.எம்.சதீஷ் தலைமை தாங்கினார்.

    மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வேலம்பாளையம் பகுதி செயலாளர் சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் ,அன்பகம் திருப்பதி, கே பி ஜி .மகேஸ்ராம், ஹரிஹரசுதன், எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தண்ணீர் பந்தல் தனபால், நிர்வாகிகள் கண்ணபிரான் ,ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சியின் பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி நாளை 12.11.2022 அன்று திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை,மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியபகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.

    மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் ,விளம்பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள் தெருக்களின் பெயர்ப் பலகைகள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல், தார்சாலை அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

    பல்வேறு சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில், 60 வார்டுகளிலும் சாலைப்பணிகளை சீரமைப்பது மற்றும் குழிகளை மூட நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், தலா ஒவ்வொரு மண்டலத்திற்கும் 8 பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிப்பர், ஒரு ரோலர் மற்றும் 16 பணியாளர்கள் என 32 பொக்லைன் எந்திரம் மற்றும் 64 பணியாளர்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 4 மண்டல அலுவலகங்களிலும் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, இல.பத்மநாபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் மேயர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் நடந்து வருகிற பல்வேறு பணிகளின் காரணமாக சாலைகள் சேதமடைந்து மக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில், பழுதடைந்த மற்றும் சேதமடைந்த சாலைகளைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்வார்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை முடிப்பதற்கு என காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. விரைவில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பாதாள சாக்கடை திட்டம், 4-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நுண்ணறிவு பிரிவுக்கு புதிதாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் நுண்ணறிவு பிரிவு போலீசார் கூண்டோடு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு பதிலாக நுண்ணறிவு பிரிவுக்கு புதிதாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த மணிகண்டன், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த அருண்குமார் ஆகியோர் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகானந்தம் மாநகர குற்றத்தடுப்பு ஆவண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ஆயுதப்படை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி ஊர்க்காவல் படைக்கும், நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த பூபதி சங்கரநாராயணன் அனுப்பர்பாளையம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும், வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த செல்வம் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

    • பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது.
    • ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் ராயப்பண்டாரம் வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி இவருடைய வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள் வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், வானுமாமலை, நல்ல கண்ணு, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இசக்கி பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது. ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது. இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    ×