search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    X

    மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை  எம்.எல்.ஏ. வழங்கியதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    • மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
    • மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏம்.எம்.சதீஷ் தலைமை தாங்கினார்.

    மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வேலம்பாளையம் பகுதி செயலாளர் சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் ,அன்பகம் திருப்பதி, கே பி ஜி .மகேஸ்ராம், ஹரிஹரசுதன், எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தண்ணீர் பந்தல் தனபால், நிர்வாகிகள் கண்ணபிரான் ,ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×