திருப்பூர் மாநகரில் நுண்ணறிவு பிரிவில் போலீசார் மாற்றம்

நுண்ணறிவு பிரிவுக்கு புதிதாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகரில் நுண்ணறிவு பிரிவு போலீசார் கூண்டோடு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு பதிலாக நுண்ணறிவு பிரிவுக்கு புதிதாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த மணிகண்டன், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த அருண்குமார் ஆகியோர் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகானந்தம் மாநகர குற்றத்தடுப்பு ஆவண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி ஊர்க்காவல் படைக்கும், நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த பூபதி சங்கரநாராயணன் அனுப்பர்பாளையம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும், வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த செல்வம் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com