search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணி: மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைத்தார். அருகில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா உள்ளனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணி: மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்

    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி முழுவதும் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடற்கரை முழுவதும் இருந்த குப்பைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, புனித வள்ளலார் கலைக் கல்லூரி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எனது குப்பை எனது பொறுப்பு அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவரணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா ரங்கநாதன், செந்தில் குமாரி இளந்திரையன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×