search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Jagan Periyasamy"

    • டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
    • ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செவித்திறன் கருவி, ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், தி.மு.க. பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
    • பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

    மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வை யிட்டார்.

    முதல்-அமைச்சர்

    அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் புதிய சாலைகளும் வடிகால்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

    இந்த பகுதியிலும் பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று கூறினார்.

    ஆய்வின் போது துணை மேயர் ஜெனிடா செல்வ ராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், தனலட்சுமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மரியஅந்தோணி, டேனி, அனந்தையா, சமூக ஆர்வலர் ஐசக், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
    • மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதி களில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகள் வடிகால், குடிநீர் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் முனியசாமி கோவில் தெருவில் பணிகள் நிறைவு பெற்ற புதிய தார் சாலைகள்,முத்தையாபுரம் தோப்பு தெரு பஸ் நிறுத்துமிடம், ராஜ பாண்டி நகர் மற்றும் பெரியசாமி நகர் பகுதியில் பொதுமக்கள் மட்டுமல்லாது உப்பளத் தொழிலாளர்களும் பயன்பெறும் விதமாக புதியதாக அமைய உள்ள நவீன கழிவறைக்கான இடத்தினையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை யும் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், விஜயகுமார்,ராஜதுரை, சுயம்பு,பச்சிராஜ், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய வடிகால் வசதிகள், மற்றும் புதிய சாலைகள் அமையப் போகும் பகுதிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மேற்கு மண்டல தலைவர் அன்ன லெட்சுமி கோட்டு ராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், இசக்கிராஜா, பொன்னப்பன்,ராமர், கண்ணன், ஜான் சீனிவாசன், கந்தசாமி, விஜயலெட்சுமி துரை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோச னைகள் மேற்கொண்டார்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மின் கோபுர விளக்குகள் அமைத்துள்ளேன். தற்பொழுது தனியார் பங்களிப்புடன் மேலும் 30-க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற புதிய விளக்குகள் அமையப் பெறுகின்றது.

    அதற்கான பணிகளையும், வி.வி.டி.சிக்னலின் எதிர்புறம் உள்ள நாம் தமிழர் வளாகம் பின்புறம் பணிகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.

    பின்னர் தூத்துக்குடியில் நடைபெறும் புதிய வடிகால் பணிகள் மற்றும் 21வது வார்டுக்குட்பட்ட கோயிலில் இருந்து நீர் வெளியேற வசதியாக பைப் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை

    குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்த கழிப்பறையானது தூர்ந்து போய் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதிய கழிப்பறை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

    • கட்டிட உரிமையாளர்கள் சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது
    • சொத்துவரி எண் பெறாதவர்களுக்கு 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதிகளான வார்டு எண் 1, 2, 3, 14 முதல்18, 48, 50முதல்53, மற்றும் 55,57,60 ஆகியவற்றில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு ஊராட்சி மூலம் ஏற்கனவே சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சொத்து வரி செலுத்தாத காரணமாக மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு ள்ளது.

    எனவே கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டு சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஊராட்சி சொத்து வரி ரசீது,பத்திரம் பட்டா, போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சொத்து வரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது,இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் நேரடி ஆய்வின்போது வரிவிதிப்பு எண்கள் பெறப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்தும் விதமாக சொத்து வரி நிர்ணயம் செய்வதன் பொருட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் பெரும் வகையில் வாய்ப்பு அளிக்கும் விதமாக மாநகராட்சிக்கான சொத்துவரி எண் இதுவரை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் குப்பைகள் அகற்றப்பட்டது.
    • மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

    தூத்துக்குடி:

    உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில், தூய்மை பணியாளர்கள் கல்லூரி மாணவ -மாணவிகள் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் மெகா தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    28 டன் குப்பை அகற்றம்

    தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் திரேஸ்புரம்,விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் கடற்கரையோர பகுதிகளில் கிடந்த பாலிதீன் பேப்பர்கள்,பிளாஸ்டிக் கழிவுகள், சேதமாகி பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகள்,கயிறுகள், பேப்பர் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆலோசனையின்படி இதில் ஈடுபட்ட மாநகர நகர்நல அலுவலர் அருண் குமார்,உதவி ஆணையர் தனசிங்,சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்யநாதன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, பவானிமார்ஷல் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர்,பொதுச்சேவை நண்பர்கள் குழுவினர், அஜித் நற்பணி மன்றத்தினர், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் என 500-க்கும் மேற்பட்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

    நிகழ்ச்சியின்போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படைவசதிகளை முழுமையாக செய்து கொடுத்திட மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே 100 சதவீதம் மிகத் தூய்மை யான,சுத்தமான மாநகராட்சி தூத்துக்குடி என கூறும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் பூங்கா,பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மாநராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கிளினீங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதோடு பொது இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதை தவிர்த்திட நவீன வடிவிலான குப்பை தொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து போடவேண்டும். இந்த நேரத்தில் மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலு–மாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த தடை செய்யப்பட்ட பொரு ட்களின் பயன்பாடு பொது மக்களிடத்தில் இன்னும் குறையாமலே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே, வணிகர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுகாதாரமான குப்பை இல்லாத மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×