search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி முழுவதும் புதிய சாலை, வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
    X

    தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி முழுவதும் புதிய சாலை, வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

    • மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
    • பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

    மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வை யிட்டார்.

    முதல்-அமைச்சர்

    அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் புதிய சாலைகளும் வடிகால்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

    இந்த பகுதியிலும் பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று கூறினார்.

    ஆய்வின் போது துணை மேயர் ஜெனிடா செல்வ ராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், தனலட்சுமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மரியஅந்தோணி, டேனி, அனந்தையா, சமூக ஆர்வலர் ஐசக், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×