என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்-மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்
- டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
- ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செவித்திறன் கருவி, ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், தி.மு.க. பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






