search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery river"

    • குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). கடந்த 15 வருடமாக பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்திபன் குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்த்திபன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் தங்கராஜ் இறந்து கிடந்தார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை பகுதி யை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). விவசாயி. இவர் நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் இறந்து கிடந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் இது குறித்து அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லிகா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது மனைவி மல்லிகா கூறும் போது, எனது கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு கீழே விழுவது வழக்கம்.

    அதே போல் எனது கணவர் மது போதை யில் நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் போது நிலை த்தடுமாறி கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு இறந்து இருக்கலாம் என தெரி வித்தார்.

    இதையடுத்து தங்கராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
    • காவிரி படுகையின் பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில் திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

    மேட்டூர் அணை வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே திறக்கப்பட்டதும், வழக்கத்தை விட கூடுதலாக 19 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதும் உண்மை தான். ஆனால், காவிரி படுகையின் பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகவில்லை.

    குறுவைக்கு பிறகு தாளடி சாகுபடி தாமதமாகவே தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பா மறு சாகுபடி செய்யப்பட்டது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் 20 சதவீதம் பரப்பளவிலான பயிர்களுக்கு இன்னும் அதிக நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

    தண்ணீர் இல்லாவிட்டால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்படும். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 103.60 அடி தண்ணீர் உள்ள நிலையில், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதியை சேர்ந்தவர் சொக்கப்பன் (56). தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

    சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஐப்பசி மாதத்தில் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
    • காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    திருவையாறு

    காவிரி ஆற்றுக்கு உகந்த துலாம் ராசியின் பெயரில் அமைந்துள்ள துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் எனவும்., இம்மாதக் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மேலும், கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா முதலிய புனித நதிகள அகத்திய முனிவர் அறிவுறுத்தியபடி இம்மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    நாளை ஐப்பசி மாதக் கடைசி நாள் என்பதால் காசிக்கு வீசம் கூட என்னும் பெருமையுடைய திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் இதுவரையில் துலாஸ்நானம் செய்யாதவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தமது பாவங்களை போக்குவதற்காக காவிரியில் புனித நீராடுகிறாரகள்.

    கடைமுழுக்கு நாளில் காவிரி ஆற்றுக்கு வந்து சேர முடியாத முடவர்களுக்கு சிவபெருமான் அருளியவாறு நாளை மறுநாள் முடவன் முழுக்கு நடக்கிறது.

    கடைமுழுக்கை முன்னிட்டு திருவையாறு கடை வீதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பனிக்கரும்புகளை புனித நீராடிச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரசாதமாக கருதி விலைக்கு வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

    • சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
    • அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மக்களுக்கு நிரந்தரமாக சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தி ற்கான பணிகள் தொடங்க ப்பட்டது.

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சைக்காளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மன்ன தாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் கிணறு அமைக்க ப்படுகிறது. அதில் இருந்து குழாய் மூலம் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் கூடுதலாக கிணறு அமைக்க ப்படுகிறது.

    அங்கிருந்து புஞ்சைக் காளமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட கணபதி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கு நீரை சுத்திகரிப்பு செய்ய ப்படுகிறது.

    இதன் மூலம் மொடக் குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து, கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களில் நீர் உந்து நிலையங்களில் கொண்டு சென்று பின்னர் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் புதிதாக 25 தரை மட்ட நீர் தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட உள்ளது.

    மேலும் 25 தரை மட்ட நிர் தேக்க தொட்டிகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 554 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 225 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீ ரைக் கொண்டு சென்று அதன்மூலம் வீட்டு இணைப்பு களுக்கு நேரடி யாக குடிநீர் வழங்க உள்ளனர்.

    இதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் 20.50 மில்லியன் லிட்டர் எடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளைச் சேர்ந்த 442 குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்டம் பாசூர் பேரேஜ்க்கு அருகே உள்ள மன்னதாம்பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் கோடை காலங்களில் பேரேஜில் தண்ணீர் தேக்கும் போது இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதிலிருந்து காவிரி ஆற்றின் கரைப்பகுதியான மன்னதாம்பாளையத்தில் கூடுதலான கிணற்றுக்கும் பெரிய குழாய் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

    அதேபோல் கணபதி பாளையத்தில் அமைக்க ப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பணியும், 4 நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, புதிதாக ஊராட்சி களில் கட்டப்பட்டு வரும் 225 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வ டைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.


    பரமத்திவேலூர்:


    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, ஈருடையான்பட்டு கிராமம், மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் மதலைமுத்து.


    இவருடைய மகன் பெனிட்டோ போஸ்கோ(வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது உறவினருடன் கடந்த 24-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தார். 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் உள்ள தனது அண்ணன் அருள்நிர்மல்ராஜ், தனது தாயை பார்க்க வருமாறு போன் செய்து அழைத்துள்ளார்.


    பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் 2 நாட்கள் ஆகியும் திருப்பூர் வராததால் அவரது அண்ணன் மீண்டும் போன் செய்துள்ளார்.ஆனால் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து ஜமீன்இளம்பள்ளிக்கு வந்து பார்த்தார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.


    இந்த நிலையில் நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அருள்நிர்மல்ராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது பெனிட்டோ போஸ்கோ என்பது தெரியவந்தது.இது குறித்து அவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    புகாரின் அடிப்படையில் போலீசார் பெனிட்டோ போஸ்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.காவிரி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.


    • காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

    கரூர்:

    கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26). இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சில பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் பரிகாரம் செய்வதற்காக தனது ஊருக்கு வந்துள்ளார்.பரிகாரம் செய்த பிறகு பரிகாரம் செய்யப்பட்ட தகரத்திலான தகடை ஆற்றில் விடுவதற்காக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு வந்துள்ளார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் (17), அருண்குமார் (22) ஆகிய 2 பேரும் வந்துள்ளனர்.

    கலையரசன் பரிகார தகடை ஆற்றில் விட்டு விட்டு கரைக்கு வந்துள்ளார். ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், தண்ணீரின் வேகத்தின் காரணமாக அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதைப் பார்த்த கலையரசன் அவரை காப்பாற்ற முயற்சித்தபோதும் சுரேந்தர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார். சுரேந்தர் தண்ணீரில் மூழ்கியது குறித்து அருண்குமார், கலையரசன் ஆகியோர் அவர்களது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதுபோல முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கழுகூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் மூழ்கிய சுரேந்தரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சிறுவன் ஒருவன் நேற்று காவிரி ஆற்றில் மூழ்கிய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ளது.
    • கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

     திருப்பூர் :

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

    நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கு மூலம் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது. கடந்த 9ந் தேதி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரத்துப்பாளையம் அணைக்கு 4230 கன அடி நீர் வரத்து வந்தது. அதன் பின் படிப்படியாக நீர் வரத்து குறைந்து தற்போது 630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டிஎம்சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டிஎம்சி., வரை மழைத்தண்ணீர் காவிரியில் கலந்து வருகிறது. ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும்,உடைந்தும் கிடக்கிறது.

    இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. இவ்வாறு உடைந்த தடுப்பணைகள் பொதுப்பணித்துறை ஆவணங்களில் இருக்கிறதா என்பது கூட தெரியாத நிலையில், பயன்பாட்டில் இல்லாத தடுப்பணைகள் குறித்து அரசு ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள குளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடி 28-ம் பெருக்கை முன்னிட்டு திருச்சி காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • அது சமயம் பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விடப்பட்டது

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

    அதன்படி இந்தாண்டு ஆடி 28-ம் நாளான நேற்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

    அது சமயம் பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
    • மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பவானி:

    மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் ஆற்றங் கரையோரம் உள்ள பொது மக்கள் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் வடியாத தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் நடந்து செல்லபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மற்றும் சைக்கிள் ஆகியவை செல்ல அனுமதி இல்லை.

    பவானி ஆற்றில் கடந்த வாரம் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆகயத்தாமரை அதிகளவில் அடித்து வந்து தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. அதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

    இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளித்து வருகிறார்கள்.

    • காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    கரூா்:

    காவிரி ஆற்றில் வெள்ள அபாய ஏற்பட்டுள்ளதால் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் என கரூா் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

    கரூா் மாவட்டம், புகளூா் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாயனூா் கதவணை, செல்லா ண்டியம்மன்கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகியப் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மேட்டூா் அணையிலிருந்து 2 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடுவதால் கரூா் மாவட்டத்தில் காவிரிக்கரை ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வா் உத்தரவின்படி காவிரி கரையோரப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். கரூா் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் அமைந்திருக்கின்றன. அந்த 26 கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினா் மற்றும் பிறத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

    தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தவிட்டுப்பாளையத்தில் 150 குடும்பத்துக்கு மேல் தங்க வைப்பதற்கு உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

    கரூா் மாவட்டத்தில் மாயனூா் கதவணையில் தற்போது 1.60 லட்சம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 லட்சம் கனஅடி தண்ணீா் வரவாய்ப்புள்ளது. தொடா்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிா்வாகம் முழு அளவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்தவித காரணத்துக்காகவும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்"

    ×