search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறில், நாளை காவிரி ஆற்றில் கடைமுழுக்கு
    X

    திருவையாறில், நாளை காவிரி ஆற்றில் கடைமுழுக்கு

    • ஐப்பசி மாதத்தில் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
    • காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    திருவையாறு

    காவிரி ஆற்றுக்கு உகந்த துலாம் ராசியின் பெயரில் அமைந்துள்ள துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் எனவும்., இம்மாதக் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடுவதை கடைமுழுக்கு எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மேலும், கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா முதலிய புனித நதிகள அகத்திய முனிவர் அறிவுறுத்தியபடி இம்மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடி தாம் ஏற்றுக்கொண்டுள்ள பாவங்களை போக்கிக் கொண்டு பாவ நிவர்த்தி அடைவதாகவும் கருதப்படுகிறது.

    நாளை ஐப்பசி மாதக் கடைசி நாள் என்பதால் காசிக்கு வீசம் கூட என்னும் பெருமையுடைய திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் இதுவரையில் துலாஸ்நானம் செய்யாதவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தமது பாவங்களை போக்குவதற்காக காவிரியில் புனித நீராடுகிறாரகள்.

    கடைமுழுக்கு நாளில் காவிரி ஆற்றுக்கு வந்து சேர முடியாத முடவர்களுக்கு சிவபெருமான் அருளியவாறு நாளை மறுநாள் முடவன் முழுக்கு நடக்கிறது.

    கடைமுழுக்கை முன்னிட்டு திருவையாறு கடை வீதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பனிக்கரும்புகளை புனித நீராடிச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரசாதமாக கருதி விலைக்கு வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×