search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித் தொழிலாளி"

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (38) முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது.

    போலீசார் தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று இரவு பி.என்.பட்டி, கிராம நிர்வாக அலுவலர் கலையரசனிடம் சரணடைந்தார். கலை யரசன் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தனர்.

    அப்போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தான் வைத்திருந்த கொடுவாளால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை அடுத்து கார்த்திகை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
    • மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டனின் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்ட மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பிச்சம்பாளையம், கணபதி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (38). கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் தொடர் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரிகிருஷ்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்து சென்னை - கும்பகோணம் சாலையில் ப.வில்லியனூர் கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தராஜ் (38). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி உறவு முறைகொண்டவர்கள். இருவருமே விவசாயக் கூலி மற்றும் சமையல் வேலை தொழிலாளிகள். இதில் ஆனந்தராஜ் வீட்டில் இருந்த மரத்தின் இலைகள், அரிகிருஷ்ணன் வீட்டில் விழுந்து வந்தது. எனவே, மரக்கிளைைய வெட்டுமாறு ஆனந்தராஜிடம் அரிகிருஷணன் கூறியுள்ளார்.

    இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்க வந்த ஆனந்தராஜ் நடந்தது தொடர்பாக மனைவி மற்றும் மகன்களிடம் கூறினார். தொடர்ந்து அனைவரும் அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பேசினர். அப்போது வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. 

    அப்போது ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அரிகிருஷ்ணனின் தொடையில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அரிகிருஷ்ணன் மயங்கிவிட்டார். இது குறித்த தகவலி்ன் பேரில் வளவனூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா, மூத்த மகன் ஈஸ்வரன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தராஜின் 17 வயது மகன், 15 வயது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமு வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரது பின்னால் வந்த கார், ராமு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக கூலித் தொழிலாளி போராடுகிறார்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    ஆலங்குடி,


    புதுக்கோட்ட மாவட்டம் ஆலங்குடி தேரோடும் கீழவீதியை சேர்ந்தவர் ராமானு ஜம் (வயது 44) கூலித் தொழிலாளி. இவருக்கு உமா ராணி (35) என்ற மனைவி , கலையரசன் (13) தீனதயாளன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் அரசு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் தீனதயாளனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில ரத்தக் கசிவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில லட்சங்களை செலவழித்து விட்டு இப்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாதந்தோறும் மகனின் சிகிச்சைக்கு மட்டும் ரூ. 6 ஆயிரம் செலவாகிறது. கூலித் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் மருத்துவமனை செலவுக்கு சென்று விடுகிறது. இதற்கிடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவ லகத்தை ராமானுஜம் நாடி யுள்ளார். தாசில்தாரிடம் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாலுகா அலுவலகத்தில் மனு செய்த ராமானுஜத்துக்கு விடிவு பிறக்கவில்லை. ராமானுஜம் குடியிருக்கும் பகுதி குளத்துவாரி புறம்போக்கு என்பதால் புதிய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ராமானுஜம் கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் தனது கஷ்டநிலையை விவரித்துள்ளார். ஆனால் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

    இது குறித்து ராமானுஜம் கூறுகையில் :- நான் குடியிருக்கும் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. என் வீடு தவிர்த்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. என் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நடையாய் நடக்கின்றேன். ஆனால் இந்த ஏழையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரவு நேரங்களில் உடல்நிலை சரியில்லாத மகனை வைத்துக் கொண்டு தூக்கமின்றி தவிக்கிறோம்.

    என்னை மட்டும் புறக்கணிப்பது ஏன் என்று தெரிய வில்லை. கடந்த வாரம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்று கலெக்டரிடமும் மனு அளித்து விட்டு வந்தேன். எங்கள் வாழ்வில் எப்போது இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

    • கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதை அடுத்து வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கம்.
    • முகமது விசாரணைக்காக நேரில் ஆஜராக தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.

    மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் என்கிற தினசரி கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

    இந்நிலையில், திடீரென கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை அடுத்து, அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கண்ட பிறகே தனது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்துள்ளது.

    வங்கி கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது தொடர்பாக விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்குள் ஆஜராகும்படி முகமதுவுக்கு தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து முகமது நசிருல்லா மண்டல் கூறுகையில், "காவல் துறையினரிடம் இருந்து அழைப்பு வந்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை.

    எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை தானா என நான் பலமுறை மறுபரிசீலனை செய்தேன். கணக்கு பரிவர்த்தனை பற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பாஸ்புக்குடன் சென்றேன். வங்கி கணக்கு முடக்குவதற்கு முன்பு ரூ.17 இருந்ததாக கூறப்பட்டது. வங்கி கணக்கில் வெறும் ரூ.17 வைத்திருந்த நிலையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது" என்றார்.

    • விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 27). கூலித் தொழிலாளி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.

    கடந்த 14-ந் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் கரவழிமாதப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவரது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது என கூறினார். இதனை அவர்கள் உண்மை என நம்பினர்.

    பின்னர் பாலசுப்பிரமணியம் சிறுமியை தனது வீட்டில் வைத்து 5 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பாலசுப்பிரமணியம் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து 5 நாட்களாக சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 5 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.
    • திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, வேலு புதுத் தெரு 1- வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. நேற்று  வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதை அடுத்து அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிக் கொண்டு ஓட்டிச் சென்றார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் திருடன் , திருடன் என சத்தம் போட்டுக் கொண்டே அவரை துரத்திச் சென்றனர் . இருந்தாலும் அந்த நபர் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மூணாங்கரடு செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுண்ணாம்பு குணசேகரன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.


    பரமத்திவேலூர்:


    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, ஈருடையான்பட்டு கிராமம், மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் மதலைமுத்து.


    இவருடைய மகன் பெனிட்டோ போஸ்கோ(வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது உறவினருடன் கடந்த 24-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தார். 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் உள்ள தனது அண்ணன் அருள்நிர்மல்ராஜ், தனது தாயை பார்க்க வருமாறு போன் செய்து அழைத்துள்ளார்.


    பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் 2 நாட்கள் ஆகியும் திருப்பூர் வராததால் அவரது அண்ணன் மீண்டும் போன் செய்துள்ளார்.ஆனால் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து ஜமீன்இளம்பள்ளிக்கு வந்து பார்த்தார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.


    இந்த நிலையில் நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அருள்நிர்மல்ராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது பெனிட்டோ போஸ்கோ என்பது தெரியவந்தது.இது குறித்து அவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    புகாரின் அடிப்படையில் போலீசார் பெனிட்டோ போஸ்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.காவிரி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.


    ×