கூலித் தொழிலாளி மூச்சுத் திணறி சாவு

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூலித் தொழிலாளி மூச்சுத் திணறி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பிச்சம்பாளையம், கணபதி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (38). கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் தொடர் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com