மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

சேலத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி, வேலு புதுத் தெரு 1- வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. நேற்று  வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதை அடுத்து அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிக் கொண்டு ஓட்டிச் சென்றார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் திருடன் , திருடன் என சத்தம் போட்டுக் கொண்டே அவரை துரத்திச் சென்றனர் . இருந்தாலும் அந்த நபர் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மூணாங்கரடு செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுண்ணாம்பு குணசேகரன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com