மரக்காணம் அருகே கார் மோதி நடந்து சென்ற கூலித் தொழிலாளி பலி

ராமு வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
மரக்காணம் அருகே கார் மோதி நடந்து சென்ற கூலித் தொழிலாளி பலி
Published on

விழுப்புரம்:

மரக்காணம் அடுத்த பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரது பின்னால் வந்த கார், ராமு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com