திருவெண்ணைநல்லூர் அருகே கூலித் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே கூலித் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டனின் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்ட மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com