search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக போராடும் கூலித் தொழிலாளி
    X

    15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக போராடும் கூலித் தொழிலாளி

    • 15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக கூலித் தொழிலாளி போராடுகிறார்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    ஆலங்குடி,


    புதுக்கோட்ட மாவட்டம் ஆலங்குடி தேரோடும் கீழவீதியை சேர்ந்தவர் ராமானு ஜம் (வயது 44) கூலித் தொழிலாளி. இவருக்கு உமா ராணி (35) என்ற மனைவி , கலையரசன் (13) தீனதயாளன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் அரசு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் தீனதயாளனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில ரத்தக் கசிவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில லட்சங்களை செலவழித்து விட்டு இப்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாதந்தோறும் மகனின் சிகிச்சைக்கு மட்டும் ரூ. 6 ஆயிரம் செலவாகிறது. கூலித் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் மருத்துவமனை செலவுக்கு சென்று விடுகிறது. இதற்கிடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவ லகத்தை ராமானுஜம் நாடி யுள்ளார். தாசில்தாரிடம் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாலுகா அலுவலகத்தில் மனு செய்த ராமானுஜத்துக்கு விடிவு பிறக்கவில்லை. ராமானுஜம் குடியிருக்கும் பகுதி குளத்துவாரி புறம்போக்கு என்பதால் புதிய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ராமானுஜம் கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் தனது கஷ்டநிலையை விவரித்துள்ளார். ஆனால் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

    இது குறித்து ராமானுஜம் கூறுகையில் :- நான் குடியிருக்கும் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. என் வீடு தவிர்த்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. என் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நடையாய் நடக்கின்றேன். ஆனால் இந்த ஏழையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரவு நேரங்களில் உடல்நிலை சரியில்லாத மகனை வைத்துக் கொண்டு தூக்கமின்றி தவிக்கிறோம்.

    என்னை மட்டும் புறக்கணிப்பது ஏன் என்று தெரிய வில்லை. கடந்த வாரம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்று கலெக்டரிடமும் மனு அளித்து விட்டு வந்தேன். எங்கள் வாழ்வில் எப்போது இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

    Next Story
    ×