search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building"

    • 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை வீடுகளுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வல்ளூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டா, 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

    முன்னதாக, வள்ளூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை அப்பகுதியிலுள்ள வீடு களுக்கே சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினர்களாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கு வருபவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்கிறார். முடிவில் பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறுகிறார். விழாவில் சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார் ராமசாமி, இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.
    • 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட கான்கிரீட் வீட்டை இடிக்காமல் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.

    இதுகுறித்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொன்லிங்கம் கூறும்போது, 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது. பின்னர் 60 ரோலர்கள் உதவியோடு கட்டிடம் நகர்த்தப்பட்டது. ஒரு நாளுக்கு 8 அடி தூரம் என 3 நாட்களில் 24 அடி தூரம் நகர்த்தப்படும். இதுவரை 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்டிடத்துக்கு எந்தவித சேதரமும் ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 5 மாடி உயர கட்டிடம் வரை நகர்த்தவும், உயர்த்தவும் முடியும் என்றார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.
    • பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தஞ்சாவூர்:

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 28மாவட்டங்களில் மாவட்ட அளவிலான வணிக வளாகம், பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வளாகங்களில் கடைகள், கூட்ட அரங்குகள், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் (பூமாலை வணிக வளாகம்) ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்டு இயங்கி வந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டபேரவையில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி பூமாலை வணிக வளாகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்தி பொதுமக்களை கவரும் வகையில் தரம் உயர்த்தி பழுது பார்த்தல், உள்கட்டமைப்பு மேம்படுத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற திட்டப்பணிகளை ரூ.51.41 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து பூ மாலை வணிக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    பின்னர் பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.

    தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர். 

    • 13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மாணவர்கள் அங்குள்ள கலையரங்க மேடையிலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். வகுப்பறை இல்லாமல் கடும் வெயிலில் மாணவர்கள் அவதிப்படுவது அண்மையில் சமூக வலை தளங்களில் வெளியானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கூறியதாவது,

    நாகையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இதுவரை 6 பள்ளிகளுக்கு இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசின் பொது நிதியின் கீழ் 7 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    முட்டம் பள்ளியின் நிலையை ஏற்கெனவே நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டேன். 2023-24 ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதியளித்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.

    மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.

    ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
    • அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக் குட்டம் மற்றும் பள்ளப்பட்டி கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்தம் ரூ.81லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்ன ரசு மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராம பகுதி கள் வரை பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும்.

    அதற்கு இணையாக கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி யாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
    • வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடை இயங்கி வருகிறது. வங்கிக்கும், ரேசன் கடைக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

    ஆனால், தற்போது அந்த சோதனை சாவடி கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் மூடப்பட்டு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

    இதனால் அருகில் உள்ள வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சோதனை சாவடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவை காவூர் ஊராட்சி, புதுகண்டி ப்படுகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2019-20 ஆண்டுக்கான நிதியிலிருந்து ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிறகு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரை ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஊராட்சி துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், ஹாஜா மைதீன், ஒன்றிய துணை செயலாளர்கள் பிரபாகரன், சரவணன், புதுகண்டி படுகை கிளை நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணியன், வினோத், ஒன்றிய பிரதிநிதி கருப்பூர் மகேஸ்வரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    • பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் கடந்த2017 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ மனைக்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

    கால்நடை மருத்துவமனை திறந்து சில ஆண்டுகளிலியே கட்டிடத்தின்வெளி மற்றும் உட்பகுதியில் பல இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கட்டிடத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    அரசின் நிதிமூலம் கட்டபட்ட கட்டிடம் சில ஆண்டுகளிலேயே விரிசல்ஏற்பட்டு விரைவிலேயே கட்டிடம் இடிந்து விடும்அபாயத்தில் உள்ளது என இப்பகுதியினர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

    மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதான அந்த கட்டித்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×