search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycle"

    • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.

    தென்காசி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது. தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். போட்டியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
    • இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர். 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள் 15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வர உள்ளனர்.

    இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.

    இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • கரூரில் 490 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
    • அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று வழங்கினார்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள 67 அரசு, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 4,019 மாணவர்கள், 4,458 மாணவிகள் என மொத்தம் 8,477 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. நேற்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 213 மாணவர்களுக்கும், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 131 மாணவர்களுக்கும், பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 146 மாணவிகளுக்கும் என மொத்தம் 490 மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 32 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:- கடந்த ஆண்டு நமது பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை விட அடுத்த ஆண்டு அதிகமான தேர்ச்சி பெற்றோம் என்ற நிலையை மாணவர்கள் உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் சிறப்போடு வழிநடத்தி கொண்டிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்து மாணவர்களுக்கான கல்வி நலனில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி ஒரு அற்புதமான திட்டம், நாட்டுக்கு வழிகாட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டம். ரூ.36 ஆயிரத்து 895 கோடி பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம், இந்த 2 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை பெற்று இருக்கிறது. கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கரூருக்கு ஒரு அரசு வேளாண்மை கல்லூரி அறிவித்து, தற்போது வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அரவக்குறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என இதுபோன்ற தொடர்ச்சியான திட்டங்களோடு சேர்த்து தடுப்பணைகள், கதவணைகள் இன்னும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழங்கி கொண்டிருக்கிறார், என்றார்.

    • விருதுநகர் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.என்.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி னார். இதில் ராதாகிருஷ்ணன்பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், உறுப்பினர்கள் ஸ்ரீதரன், வெங்கட்ராமன், திருமலை, மணி, வரதராஜன், தலைமை ஆசிரியர் கண்ணன், தலைமை ஆசிரியை கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கரடிவாவியில் எஸ்.என்.எம்.எல். மேல்நிலை பள்ளியில் 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி வரவேற்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு,ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன், மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி, மற்றும் என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிற்பி செல்வராஜ், செம்மிபாளையம் திருமூர்த்தி, கீர்த்தி சுப்பிரமணியம், இளைஞரணி ராஜேஸ்வரன், மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும்

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- சைக்கிள் என்பது பயணத்திற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத வாகனம் ஆகும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மிதி வண்டி பயணம் செய்து கல்வி கற்றேன். அதனால் தான் பொதுவாழ்வில் இன்று உடல் வலுவோடு நான் இருக்கிறேன். அதற்கு மிதி வண்டி ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். இதன் மூலம் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கலாம்.தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைய சமுதாயம் சீர்கெடுகிறது. அதனை ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    போதை பொருட்களை விற்றால் அல்லது பயன்படுத்தினால் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்தால் போதும் அவர்களின் விபரம் வெளியே வராது. அச்சப்பட வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
    • ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.

    அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    அவர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றார்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். காரைக்குடி நகர்மன்றத்தலைவர் முத்துதுரை தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்வர், அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், புத்தகங்கள், காலையில் சிற்றுண்டி உள்பட பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் கல்வி கற்பதை மட்டுமே சிந்தித்து வாழ்வில் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றார்.

    பின்னர் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளில் படிக்கும் 1700 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கி ள்களை நகர்மன்றத்தலைவர் முத்துதுரை மற்றும் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினர். இதில் சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி நகர் மன்ற தலைவர் வழங்கினார்.
    • அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரும ங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் 100 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சங்கீதா, முருகன், சரண்யா, ரவி மற்றும் தலைமை ஆசிரியர் பாஸ்கரன்,ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    இந்த விழாவில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×