என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. மாங்குடி சைக்கிள் வழங்கியபோது எடுத்த படம். அருகில் நகர்மன்றத்தலைவர் முத்து துரை உள்பட பலர் உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
- காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
- மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
காரைக்குடி
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். காரைக்குடி நகர்மன்றத்தலைவர் முத்துதுரை தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்வர், அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், புத்தகங்கள், காலையில் சிற்றுண்டி உள்பட பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் கல்வி கற்பதை மட்டுமே சிந்தித்து வாழ்வில் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றார்.
பின்னர் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளில் படிக்கும் 1700 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கி ள்களை நகர்மன்றத்தலைவர் முத்துதுரை மற்றும் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினர். இதில் சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






