search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்க ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), மாவட்ட அலுவலர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் திருப்புல்லாணியில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் குதுபுதீன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர். மாநில தலைவர் நெல்லை முபாரக் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.

    இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சோமு, கிழக்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி, மேற்கு சட்ட மன்ற தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி துனை தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பி னர்கள் பாரூக் ராஜா முஹம்மது, சாதிக் சலீம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தன பீர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசாத், மேற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் நவர்சா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் அப்தீன், முஸ்தாக் அஹமத், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை தலைவர் முபீனா மற்றும் பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புரோஸ் கான், கீழக்கரை 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் சஹீனா பேகம் கிழக்கு, மேற்கு மாவட்ட தொகுதி, நகர, கிளைகளின் நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித் துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்

    துள்ளார்.

    • பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேலூர் கீழையூரில் நடந்தது.

    தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், வெள்ளைச்சாமி, வர்த்தக அணி தலைவர் தர்மலிங்கம், ஆன்மீக பிரிவு தலைவர் தங்கையா, விவசாய அணி செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் பூமிராஜன், விவசாய அணி தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபு மற்றும் மணி, புவனேஸ்வரன், சிவா, சிவகுமார், அருண், பாலமுருகன், செல்வராஜ், தங்கையா, சீனிவாசபெருமாள், பூபதி, சிவதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
    • உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு பெற்றோர் -ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் இறை வணக் கத்துடன் தொடங்கியது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தேன்மொழி வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய கல்லூரி விதிமுறைக ளையும் கல்வியின் முக்கியத் துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    மேலும் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தொடர்பு இயக்குனர்இர்பான் அகமது மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் பயிற்சி வகுப்புகள் பற்றியும், பெற்றோரும் மாணவிகளின் ஒழுக்க நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து ரைத்தார்.

    தொழில் முனைவோர் இயக்குனர் ரோசி பெர்னா ண்டஸ் கல்லூரியில் படிக்கும் போதே மாணவி கள் தொழில் வல்லுனராக உருவாகுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கி னார். முடிவில் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை சீதக்காதி அறக்கட்ட ளையின் துணை பொது மேலாளர் ஷேக் தாவூது கான் மற்றும் பேராசிரியர் கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாண விகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் காவேரி, 79-வது வார்டு வட்ட செயலாளர் பாலாஜி மற்றும் ஜெய்ஹிந்துபுரம் சிராஜ், சதீஸ் குமார், மரக்கடை வெங்கடேஷ், உமா மகேஸ்வரன், சிவபாலன், ஆர்.சதிஸ்குமார், அக்னி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், பகுதி இளைஞரணியை சேர்ந்த கோகுல்நாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். பொருளாளர் ராசப்பன் வரவு, செலவு கணக்கினை சமர்ப்பித்தார்.

    சங்க நிறுவனரும், கவுரவத் தலைவருமான நடராஜன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராஜா, பொய்யேரி மற்றும் கொமராபாளையம் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். ஏற்கனவே தூர்வாரப்பட்ட வாய்க்கால்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மண்ணை வாய்க்கால் கரையிலேயே வாகனங்கள் செல்லும் வகையில் சீர் செய்ய வேண்டும்.

    வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே பொத்தனூரில் நன்கு செயல்பட்டு வந்தது. அதை மீண்டும் பரமத்திவேலூர் பகுதிக்கு கொண்டு வர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.

    குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதித்தமிழர் பேரவை கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாடிப்பட்டி

    மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பேத்செல்வம், நிதிச்செயலாளர், பகலவன், கொள்கை பரப்புச் செயலாளர், சாந்தி முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சிறுவாலை செல்வபாண்டி வரவேற்றார்.

    தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் பேசினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கவுரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதி அழகன், துணைத் தலைவர் சரவணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஆதிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றுவிழா நடத்துவது, மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

    • கடலாடியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்-தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் நீர் பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாத், இளைஞரணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், கருப்பசாமி, புண்ணியவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சர்புதீன், ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, முன்னாள் கடலாடி துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய அவை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலாடி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
    • கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.   இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது.
    • சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா பழையவலம் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா மகிழஞ்சேரி கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் குடவாசல் தாலுகா நெய்க்குப்பை கிராமத்தில், திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா, அன்னுக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா, அனுமந்தபுரம் கிராமத்தில், திருவாரூர் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் தலைமையிலும் நடக்கிறது.

    மன்னார்குடி தாலுகா, கீழநத்தம் கிராமத்தில், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பல் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பருத்தியூர் கிராமத்தில், திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா, பின்னத்தூர் கிராமத்தில் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே, தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×