search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு  பேரவைக் கூட்டம்
    X

    வெற்றிலை விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 

    தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம்

    • 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். பொருளாளர் ராசப்பன் வரவு, செலவு கணக்கினை சமர்ப்பித்தார்.

    சங்க நிறுவனரும், கவுரவத் தலைவருமான நடராஜன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராஜா, பொய்யேரி மற்றும் கொமராபாளையம் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். ஏற்கனவே தூர்வாரப்பட்ட வாய்க்கால்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மண்ணை வாய்க்கால் கரையிலேயே வாகனங்கள் செல்லும் வகையில் சீர் செய்ய வேண்டும்.

    வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே பொத்தனூரில் நன்கு செயல்பட்டு வந்தது. அதை மீண்டும் பரமத்திவேலூர் பகுதிக்கு கொண்டு வர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×