என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ பேசினார். அருகில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளனர்.
கடலூரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
- கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.






