search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games"

    • கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.
    • 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டுப்போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

    கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு நடந்தது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம் பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 40 விளையாட்டுக்கள் 482 பிரிவில் நடைபெறுகிறது.

    ஆசிய விளையாட்டு போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை கடந்த 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

    வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துசண்டை, செஸ், கிரிக்கெட், வாள் வீச்சு, ஆக்கி, கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

    ஜகார்தாவில் 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 524 பேர் கொண்ட இந்திய அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்றது. கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம், ஆகமொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று.

    இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி விவரம் வருமாறு:

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.

    மாற்று வீரர்களின் பட்டியலில் யாஷ் தாக்குர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டுக்கான இந்திய பெண்கள் அணி விவரம் வருமாறு:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
    • பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.

    அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்ஷி மாலிக் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

    நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

    பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்கை வருகிற 15-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் நடைபெறும் ஜந்தர்மந்தரில் இருந்து 17-ந்தேதி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம். புகார் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார். மிரட்டல் காரணமாக புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    சென்னை:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.



    அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    ‘தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தி தீவிர பயிற்சி மேற்கொண்டால் ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க முடியும்’ என்று ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் தெரிவித்தார். #AsianGames2018
    சென்னை:

    சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், தருண் 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தலா 2 வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வலுதியூரை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண் ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையை உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரர்களை வாழ்த்தினார். அத்துடன் வீரர்கள் இருவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.


    பின்னர் 21 வயதான தருண் அளித்த பேட்டியில், ‘காயத்தில் இருந்து மீண்டு வந்து 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 48.96 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை என்னால் நம்பமுடியவில்லை. ஐரோப்பாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டது எனது திறனை மேம்படுத்த உதவிகரமாக இருந்தது. அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்த இருக்கிறேன். தீவிர பயிற்சி மேற்கொண்டு எனது திறமையை வளர்த்து கொண்டால் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற முடியும். இந்திய அணியின் பயிற்சி முகாமை பாட்டியாலாவுக்கு பதிலாக திருவனந்தபுரத்துக்கு மாற்றினால் நன்றாக இருக்கும். வேலைவாய்ப்பு எனக்கு வரத் தான் செய்கிறது. இருப்பினும் நல்ல வேலைவாய்ப்புக்காக காத்து இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    27 வயது ராணுவ வீரரான ஆரோக்ய ராஜீவ் அளித்த பேட்டியில், ‘ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனது செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதற்கு சத்தான உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு காரணமாகும். தேசிய பயிற்சி முகாமில் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள் தான் அளிக்கப்படுகிறது. வீரர்கள் கலந்து கொள்ளும் பந்தயத்திற்கு தகுந்த மாதிரி உணவு வழங்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடும் போது ஒருவித சலிப்பும் ஏற்படுகிறது. தேசிய பயிற்சி முகாம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டால் சவுகரியமாக இருக்கும். அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள போட்டி குறித்து கவனம் செலுத்த இருக்கிறேன். நவீன தொழில்நுட்ப வசதியை சரியாக பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் நம்மால் ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க முடியும்’ என்று கூறினார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #AsianGames2018 #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது.

    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்திய வீர்ர்  வீராங்கனைகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய வரலாறை உருவாக்கியுள்ள்து. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள், உறவினர் மற்று நண்பர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்பியன்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.  #AsianGames2018 #PMModi
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGames2018
    ஆலந்தூர்:

    இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வருண் தக்கார், கணபதி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் வர்ஷா, சுவேதா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

    பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 4 பேரும் நேற்று இரவு நாடு திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், நண்பர்கள், தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    அப்போது வருண் தக்கார் பேசுகையில், தான் 8 வருடமாக பயிற்சி எடுப்பதாகவும், இப்போட்டிக்காக தான் பள்ளிப்படிப்பினை பாதியில் கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.

    கணபதி கூறுகையில், “இம்முறை வெண்கலம் வென்றதாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த விளையாட்டுக்கு போதுமான விளம்பரம் இல்லை என வருத்தம் தெரிவித்த அவர் இந்த வெற்றியை முதலில் தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.

    தொடர்ந்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கெண்டனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு தொடரில் கடைசி நாளான இன்று கலப்பு டிரையத்லான் போட்டியில் ஜப்பான் தங்கம் வென்றது. #AsianGames2018
    இந்தோனேசியாவில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளான இன்று கலப்பு டிரையத்லான் பந்தயம் நடந்தது. இதில் ஜப்பான் முதல்- இடத்தை பிடித்து தங்கம் வென்றது. கொரியாவுக்கு வெள்ளியும், ஆங்காங்குக்கு வெண்கலமும் கிடைத்தது.

    நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகிய 3 விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது டிரையத்லான் ஆகும். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை சரிதா, இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsianGames2018 #SaritaGaekwad
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    தனது திறமை மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்த சரிதா, தற்போது இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துவருகிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை 45 ஆயிரம் ரூபாயை அவருக்கு தர்ஷன் என்பவர் அனுப்பி உள்ளார்.

    கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இவருக்கு குஜராத் அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது. ஆனால் இந்த தொகை அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு தங்கம் வென்றதற்காக நேற்று குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான அரசு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #SaritaGaekwad
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் கஜகஸ்தானிடம் 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. #AsianGames2018
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி நேபாளத்தை எதிர் கொண்டது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    கால்இறுதியில் கஜகஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.



    துடுப்பு படகு போட்டியில் பிரகாஷ் சர்மா- ஜேம்ஸ்பாய் சிங் ஆகியோர் அடங்கிய அணி 200 மீட்டர் (சி2 ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டி) 9-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. #AsianGames2018
    இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை இன்று மாலை சந்திக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsianGames2018 #hockey
    ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் மலேசியாவிடம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது. பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் மலேசியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #hockey
    ×