என் மலர்

  செய்திகள்

  ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடி பரிசு- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
  X

  ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடி பரிசு- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
  சென்னை:

  இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.  அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
  Next Story
  ×