search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrests"

    • பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    காங்கயம்:

    காங்கயம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). இவா் சிற்றுந்து (மினி பேருந்து) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமாரின் மகன் மணிகண்டன் (24) லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், எஸ்.பி. பரிந்துரை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இதனையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
    • கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.

    இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்

    ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார்.
    • வீரமணி (வயது 53), ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 53), இதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இணை சார்பதிவாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இணை சார் பதிவாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளில் கீழ் வீரமணி மற்றும் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் வந்தது.
    • மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மற்றும் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார்.

     கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ் நடத்திய அதிரடி வேட்டையில் அங்கு மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் பல்லவாடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சாவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


    கடலூா:

    சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை உதவியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் சிதம்பரம் தொப்பையான் தெருவில் வசிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (வயது 19), மற்றும் ஒமக்குளம் ஜமால்நகர் முஸ்தபா(எ)சுல்தான் (22 ), சீர்காழி ராதா நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (20), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட 3 பேரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
    • அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி, ஆயிஷா காலணியை சேர்ந்தவர் தஸ்லிமா. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.தஸ்லிமா ஏற்கெனவே குடியிருந்த பைபாஸ் சாலை தீன்ஸ்பார்க்கில் வசிக்கும் உசேன்(வயது21) என்பவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, ஆயிஷா காலணி அருகே வந்து, தஸ்லிமாவிடம், உங்கள் மூத்த மகளை காதலிப்பதாக கூறி ஆபசமாக திட்டிவந்துள்ளார். இதனால் பயந்த தஸ்லிமா, தனது மூத்த மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.மேலும் ஆயிஷா காலணியில் இருந்தால் உசேன்தொடர்ந்து சண்டை போடுவார் என பயந்து, மெய்தீன்பள்ளிவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தஸ்லிமா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உசேன், நேற்று முன்தினம் தஸ்லிமா செல்போனுக்கு போன் செய்துள்ளார். அதை தஸ்லீமா எடுக்க மறுத்ததால், அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஸ்லீமா உஷேனிடம் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தஸ்லிமா காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலிசார் வழக்கு பதிவுசெய்து, உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்தார்
    • 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றுள்ள 16 கொலை வழக்குகளில் தொடர்புடைய 21 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டள்ளனர் என மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 16 கொலை சம்பவங்களில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்ஸோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 186 பேரும், 10 பாலியல் வழக்குகளில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


    மேலும், அவர்களி டமிருந்து ரூ.89 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சொத்து இழப்பு (பாரி) தொடர்பாக பதிவான 19 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன.அதேபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாலியல் குற்ற வாளிகள் 18 பேர், போதை பொருள் குற்றவாளிகள் 5 பேர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 10 பேர், சாராயம் காய்ச்சிய 5 பேர் என 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் மணல் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள், லாட்டரி மோசடி தொடர்பாக 19 வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 179 வழக்குகள், சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.67,66,010 மதிப்பில் குட்கா, ரூ.5, 25,898 மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.





    • ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வ.உ.சி. ரெயில்வே பாலத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கரிமேடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மனைவி அழகம்மாள் (46), களத்துபொட்டல், நேரு நகர் உதயகுமார் (36) என்பது தெரிய வந்தது.

    அழகம்மாளின் கணவர் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு களத்துப்பொட்டல் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, மாநகரம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்எ கைது செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • ஆத்திரம் அடைந்த முருகன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கீழதேவ நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது47) என்பவர் வெள்ளை நிற சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார்.

    இதை கண்ட போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் போலீசாரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் ரூ.1050-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×