என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரையும், கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
- பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சாவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூா:
சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை உதவியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் சிதம்பரம் தொப்பையான் தெருவில் வசிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (வயது 19), மற்றும் ஒமக்குளம் ஜமால்நகர் முஸ்தபா(எ)சுல்தான் (22 ), சீர்காழி ராதா நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (20), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட 3 பேரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






