search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 கைது-மாவட்ட எஸ்.பி தகவல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 கைது-மாவட்ட எஸ்.பி தகவல்

    • அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்தார்
    • 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றுள்ள 16 கொலை வழக்குகளில் தொடர்புடைய 21 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டள்ளனர் என மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 16 கொலை சம்பவங்களில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்ஸோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 186 பேரும், 10 பாலியல் வழக்குகளில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


    மேலும், அவர்களி டமிருந்து ரூ.89 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சொத்து இழப்பு (பாரி) தொடர்பாக பதிவான 19 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன.அதேபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாலியல் குற்ற வாளிகள் 18 பேர், போதை பொருள் குற்றவாளிகள் 5 பேர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 10 பேர், சாராயம் காய்ச்சிய 5 பேர் என 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் மணல் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள், லாட்டரி மோசடி தொடர்பாக 19 வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 179 வழக்குகள், சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.67,66,010 மதிப்பில் குட்கா, ரூ.5, 25,898 மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.





    Next Story
    ×