search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் வாட்ஸ்-அப்பில்  ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
    X

    காரைக்காலில் வாட்ஸ்-அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.

    • இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
    • அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி, ஆயிஷா காலணியை சேர்ந்தவர் தஸ்லிமா. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.தஸ்லிமா ஏற்கெனவே குடியிருந்த பைபாஸ் சாலை தீன்ஸ்பார்க்கில் வசிக்கும் உசேன்(வயது21) என்பவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, ஆயிஷா காலணி அருகே வந்து, தஸ்லிமாவிடம், உங்கள் மூத்த மகளை காதலிப்பதாக கூறி ஆபசமாக திட்டிவந்துள்ளார். இதனால் பயந்த தஸ்லிமா, தனது மூத்த மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.மேலும் ஆயிஷா காலணியில் இருந்தால் உசேன்தொடர்ந்து சண்டை போடுவார் என பயந்து, மெய்தீன்பள்ளிவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தஸ்லிமா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உசேன், நேற்று முன்தினம் தஸ்லிமா செல்போனுக்கு போன் செய்துள்ளார். அதை தஸ்லீமா எடுக்க மறுத்ததால், அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஸ்லீமா உஷேனிடம் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தஸ்லிமா காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலிசார் வழக்கு பதிவுசெய்து, உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×