search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raids"

    • போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
    • சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆபாச படம் தயாரித்து மிரட்டு பவர்கள், மணல் கடத்தல், உணவு பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு உததரவிட்டார். அதன்படி சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக ஒருநாள் சிறப்பு தணிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இந்த தணிக்கையின் போது கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இனி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    மேலும் பல்வேறு குற்றங்களில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த 6 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பண்ருட்டியில் ரவுடிகளின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி, புதுப்பேட்டையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ்,டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி)ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.

    மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.  மேலும் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

    • நியாயவிலை கடைகள் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
    • இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகல் குடும்ப அட்டை, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் ஆகியவற்றை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண் மாற்றம் செய்தல் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது பகுதிகளிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகள் பற்றி அறிய மற்றும் புகார்களுக்கு 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது.
    • 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்க ளான கஞ்சா, அபின், பிரவுன்சுகர், குட்கா, கூள்லிப், ஹன்ஸ் போன்றவைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலைய எல்லைகளில் 200 பேர் போதை பொருட்களை விற்பனை செய்துவருவதாக கண்டறி யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    • இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

    • குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.
    • இந்த நிலையில் சேலத்தில் வழிபறியில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்து பவர்கள், பாலியல் பலாத்காரம், வழிபறி, திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தில் வழிபறியில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு-

    சேலம் எருமாபாளை யத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் களரம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இவரை வழிமறித்த 3 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500-ஐ பறித்து தப்பினர். இது குறித்து விஜயகுமார், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி களான சூரியின் மகன்கள் ஜீசஸ் (35), இளையராஜா (31), செல்வா(27) ஆகி யோரை கைது செய்தனர்.

    ×