பண்ருட்டியில் தொடரும் சாராயவேட்டை: மேலும் ஒரு பெண் உள்பட 2 வியாபாரிகள் கைது

தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டியில் தொடரும் சாராயவேட்டை: மேலும் ஒரு பெண் உள்பட 2 வியாபாரிகள் கைது
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் தனி படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஏழுமலை மனைவி வெள்ளச்சி (வயது 60), உளுந்தம்பட்டு ஆறுமுகம் (42) ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில், புதுவை சாராயம் விற்பனை செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com