என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத் துறை"
- சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ராமச்சந்திரன் மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு
பயத்தை உருவாக்கியிருக்கிறது, பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மு.க.ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை
அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம்
சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் உடையாபட்டியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேகப் பொருட்கள் மாலை அலங்கார பந்தல் சீரியல் பல்புகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாக ரூ.12 லட்சம் வரை எடுக்கப்பட்டதாகவும், போலி பில் வைத்து மோசடி செய்யப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மோசடி நடந்ததாகவும் அப்போது கோவில் செயல் அலுவலராக சசிகலா என்பவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அப்போதைய செயல் அலுவலராக இருந்த சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
- 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
சென்னை:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக முறைகேடு புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.






