என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி; வாலிபர் கைது
- பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






