search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்?
    X

    பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்?

    • பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
    • கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.

    இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்

    ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×