என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![களக்காடு அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது களக்காடு அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/12/20/1809588-arrest02.webp)
X
களக்காடு அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
By
மாலை மலர்20 Dec 2022 9:22 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- ஆத்திரம் அடைந்த முருகன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கீழதேவ நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது47) என்பவர் வெள்ளை நிற சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார்.
இதை கண்ட போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் போலீசாரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் ரூ.1050-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)