என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரமணி, ராஜா.
கள்ளக்குறிச்சி இணை சார்பதிவாளருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
- கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார்.
- வீரமணி (வயது 53), ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 53), இதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இணை சார்பதிவாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இணை சார் பதிவாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளில் கீழ் வீரமணி மற்றும் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






