search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Web Series"

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா.
    • சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் பாலியல் தொழில் செய்யும் மல்லிகாஜான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதி நிகழ்ச்சியின் பின்னணியாகும். பிரிட்டிஷ் ராஜ் சகாப்தத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தால் பாலியல் தொழிலாளிகளும் நவாப்புகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதே இந்த தொடரின் கதை.

    சோனாக்ஷி சின்ஹா , அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இது பற்றி மனிஷா கொய்ராலா கூறியதாவது:-

    இந்த தொடரில் எனது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மகிழ்ச்சி. தொடரில் தவறுகள் மீது விமர்சனங்கள் இருந்த போதும் வரவேற்பு பெற்றுள்ளது. படப்பிடிப்பில் 12 மணி நேரம் நீருக்குள் நான் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீருக்குள் நின்றதால் களைப்பை தந்தாலும் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் தந்தது.

    தண்ணீர் சூடாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் சில நேரங்களில் சேரும் சகதியும் என் உடலில் ஏறியது. சில சமயங்கள் எனக்கு மன அழுத்தம் கொடுத்தாலும் நெகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • இயக்குனர் அருண் கெளஷிக் இயக்கியுள்ள வெப்தொடர் மீம் பாய்ஸ்
    • இந்த தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அருண் கௌஷிக் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மீம் பாய்ஸ்'. இந்த தொடரில் குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்ய பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜ்ஜை நடத்துகிறார்கள்,அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் ஒரு புரட்சியை உருவாக்குவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடரை ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடருக்கு கோபால் ராவ் இசையமைத்துள்ளார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இந்த வெப்தொடர் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில், இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த வெப்தொடர் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    தமிழில்  ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வா குவாட்டர் கட்டிங்', ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் ‘சூழல்’.  

    இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்.

    சூழல் வெப்தொடர்

     தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப்தொடர் ஜூன் 17-ஆம் தேதி முதல் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries
    பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    அந்தப் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.



    இந்த நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries

    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் தற்போதைய காமெடியனாக இருக்கும் மனோபாலா, புதிய அவதாரம் ஒன்று எடுக்கவுள்ளார். #Manobala
    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் தற்போதைய காமெடியனுமான மனோபாலா ஒரு டிவி சீரியலில் நடித்து வருகிறார். இதுபற்றி கேட்டபோது ‘இதற்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு குறைந்தால் சீரியல்’ என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை.

    பழைய வி‌ஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால் சினிமாக்காரர்கள் வேஸ்ட். பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்போது 'வெப் சீரிஸ்' தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நானும் ஒரு 'வெப் சீரிஸ்' தயாரித்துக் கொண்டிருக்கிறேன். படம் கிடைக்காமல் நான் சீரியலுக்கு வரவில்லை.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா', கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடித்துள்ளேன். அடுத்து சூர்யா படத்தில் நடிக்கிறேன். இயக்குனர்களுக்கு பிடித்த நடிகன் நான்.

    அதனால்தான் இத்தனை வாய்ப்புகள் வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்க இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். தம்பி ராமையா மகன், எம்.எஸ்.பாஸ்கர்னு பெரிய பட்டாளமே அதில் நடிக்கிறோம்’ என்று கூறினார்.
    ×