search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகைகள்"

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பிரபல ஆலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஏஞ்சலினாவை தொடர்ந்து மேலும் 3 நடிகைகள் கற்பழிப்பு புகார் கூறியுள்ளனர்.
    நியூயார்க்:

    பிரபல ஆலிவுட் சினிமா பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. அதை தொடர்ந்து பிரபல ஆலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோஸி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செக்ஸ் புகார் கூறினர்.

    இதனால் கைது செய்யப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர்மீது மேலும் 3 நடிகைகள் செக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மெலிசா தாம்சன்.

    கடந்த 2011-ம் ஆண்டு சந்திக்க சென்ற போது அவர் தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். அவரைப் போன்று மேலும் கேட்லின் துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 2 நடிகைகளும் அவர் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளனர். விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து தங்களுடன் செக்ஸ்சில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
    கடை திறப்பு, விளம்பரம் என திரைப்படங்களில் நடிப்பது தவிர மற்றவற்றில் கவனம் செலுத்தும் தமிழ் சினிமா நடிகைகள் மக்கள் சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது இல்லை

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்தினர் பிரச்சினைகளுக்கு கூட குரல் கொடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதாரண கடை திறப்பு விழா முதல் பெரிய கடைகளின் விளம்பரங்கள் வரை பிரபலமான நடிகைகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    விளம்பரங்களில் நடிக்க கோடிகளிலும், திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள லட்சங்களிலும் பணம் வாங்குகிறார்கள் நடிகைகள். எல்லாம் சில மணி நேரத்துக்கான சம்பளம். வணிக நிறுவனங்களும் நடிகை என்றால் தான் கூட்டம் கூடும் என்று வியாபார நோக்கத்தில் நடிகைகளை அணுகுகிறார்கள். நடிகைகளின் மார்க்கெட்டை பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும்.

    இப்படி சில நிமிடங்களுக்கே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு தங்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நடிகைகள். கடந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மிக சொற்ப நடிகைகளே கலந்துகொண்டார்கள்.

    தன்ஷிகா,ரித்விகா போன்ற இளம் நடிகைகளும், கஸ்தூரி, ஸ்ரீப்ரியா, ரேகா போன்ற மூத்த நடிகைகளும் தான் கலந்துகொண்டார்கள். இத்தனைக்கும் தமிழில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையில் வீடு இருக்கிறது. ஆனாலும் சில நிமிடங்கள் வந்து கலந்துகொள்ள அவர்களுக்கு வலிக்கிறது. தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகைகள் ஆதிக்கம் தான் அதிகம். எனவே தான் அவர்களுக்கு நமது உணர்வு புரிவதில்லை. சில முன்னணி நடிகைகளிடம் இதுகுறித்து கேட்க முயற்சித்தோம். பதிலளிக்க விரும்பவில்லை.
    ×