இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து- ஏன் தெரியுமா?

நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து- ஏன் தெரியுமா?
Published on

தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com