என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: கோலிவுட் சினிமா உலகின் புதிய ஜோடிகள் - பட்டியல் ரெடி!
    X

    2025 REWIND: கோலிவுட் சினிமா உலகின் புதிய ஜோடிகள் - பட்டியல் ரெடி!

    • திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.
    • இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர்.

    2025ஆம் ஆண்டு திரையுலகம் முழுவதும் திருமணச் சந்தோஷத்தில் மலர்ந்த வருடமாக அமைந்தது. தமிழ் சினிமாவை சேர்ந்த திரை பிரபலங்கள் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். சினிமா ரசிகர்கள் பெரிதும் நேசிக்கும் நடிகர்கள், பாடகர்கள் மற்றும் ரியாலிட்டி ஸ்டார்கள் வரை—பலரும் இந்தாண்டு மணமக்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    பிரபலங்களின் காதல் கதைகள் திருமண மேடையில் நிறைவு பெற்ற இந்த வருடத்தை, ரசிகர்கள் "ஸ்டார் வெட்டிங்ஸ்" ஆண்டாகவே கொண்டாடியுள்ளனர். இவ்வாண்டு திருமணம் செய்து கொண்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்பதை தொகுத்து பார்ப்போம்.

    1.சாக்ஷி அகர்வால்:

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

    இந்தாண்டு தொடக்கத்தில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைப்பெற்றது. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்தார். கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

    2. 'தெருக்குரல்' அறிவு:

    தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவர் அறிவு. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தெருக்குரல் அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்ப்பனாவை இன்று கரம் பிடித்தார். இத்திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக தொல்.திருமாவளவன் மற்றும் இளையராஜா கலந்துக் கொண்டனர்.

    3. கிஷன் தாஸ்:

    முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தான் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை இந்தாண்டு துவக்கத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

    4. பார்வதி நாயர்:

    மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகை பார்வதி நாயருக்கும், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர்.

    5. டி.வி. தொகுப்பாளினி பிரியங்கா

    பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

    இந்நிலையில், இந்தாண்டு வசி என்பவரை பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

    6. அபிநயா

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா.

    நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை இந்தாடினு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    7. லியோ ஹம்சவிர்தன்

    'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

    லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

    8. 'பசங்க' ஸ்ரீராம்

    பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம் . இவர் அதற்கு அடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் கடைசியாக மணிரத்னம் உருவாக்கிய நவரசா இணைய தொடரில் நடித்து இருந்தார்.

    ஸ்ரீராம் தற்பொழுது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை இந்தாண்டு திருமணம் செய்தார்.

    9. மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.

    அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக தான்.

    இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டா புகைப்படம் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

    10. TTF வாசன் திருமணம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், டி.டி.எப் வாசன் 5 வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    11. சமந்தா

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படத்தில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தாண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் சமந்தாவின் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×