search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guindy"

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.
    • மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகில் இன்று காலை 8 மணியளவில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது. 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் வாகன ஓட்டிகள் நடுரோட்டில் விழுந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரம் இந்த பணி நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் பள்ளத்தை மூடி சரி செய்தனர்.

    இதன் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளம் மூடப்பட்ட பிறகு அந்த வழியாக போக்குவ ரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் சென்றன.

    கிண்டியில் கவர்னர் மாளிகைக்குள் ஏறிக்குதித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் கவர்னர் மாளிகை காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து புகுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அவர் வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்தார்.

    செல்வராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை அளித்த தேநீர் விருந்தில் சபாநாயகர், முதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    சென்னை:

    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு செயலாளர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    சென்னை கிண்டியில் இருந்து பரங்கிமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.
    சென்னை:

    போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சித்ரா, பல் டாக்டரான இவர் தாழம்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலை கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் கிருபா ஓட்டிச் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கி பரங்கிமலை பட்ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் கிருபா அதிர்ச்சி அடைந்து காரை சாலை யோரமாக நிறுத்தினார்.

    உடனே பேராசிரியை சித்ரா, டிரைவர் கிருபா காரில் இருந்து கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று கார் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

    கிண்டியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை சித்ரா, கார் டிரைவர் கிருபா ஆகியோர் உயிர் தப்பினார்கள். #Tamilnews
    ×