search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்
    X

    கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் 'திடீர்' பள்ளம்

    • அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.
    • மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகில் இன்று காலை 8 மணியளவில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது. 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் வாகன ஓட்டிகள் நடுரோட்டில் விழுந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரம் இந்த பணி நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் பள்ளத்தை மூடி சரி செய்தனர்.

    இதன் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளம் மூடப்பட்ட பிறகு அந்த வழியாக போக்குவ ரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் சென்றன.

    Next Story
    ×