search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாகரன்"

    • இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும்
    • இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் சஞ்சிதா செட்டி முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    தமிழின் சிறந்த ப்ளாக் க்யூமர் திரைப்படங்களில் ஒன்றாக சூது கவ்வும் இன்றும் கருதப்படுகிறது.

    இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சூது கவ்வும் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கடந்த ஆண்டு  படக்குழுவினர் அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை இயக்குனர் எம். எஸ் அர்ஜூன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் 10000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தை தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என தெரிவித்தார் சி.வி.குமார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    களமச்சேரி காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்க தலைவராக இருந்து வந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தன்னை காங்கிரசார் அவமதித்துவிட்டனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம், சுயமரியாதையுடன் செயல்பட முடியாத நிலை காங்கிரசில் இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பத்மஜாவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    சாலக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பத்மஜா போட்டியிடலாம் என்று கூறப்பட்டாலும், வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. இதனால் வயநாடு தொகுதியிலேயே அவர் போட்டியிடலாம் என தெரிகிறது.

    திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கேரள மாநில தலைவர் கே. முரளீதரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    • கேரளாவில் கருணாகரன் நினைவிடம் கட்டுவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாக பத்மஜா கருதினார்.
    • இதனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்துவந்தார்.

    புதுடெல்லி:

    கேரள முன்னாள் முதல் மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான இவர், கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

    கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தியின் வாகனத்தில் பத்மஜா ஏற முயன்றபோது, கட்சியின் உள்ளூர் தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதில் இருந்து பத்மஜாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என பத்மஜா எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதற்கிடையில், கேரளாவில் கருணாகரனின் நினைவிடம் கட்டுவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாகவும் பத்மஜா கருதினார். இதனால் கட்சி மீது அதிருப்தியில் இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாளாக டெல்லியில் முகாமிட்டிருந்த பத்மஜா, நேற்று பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பத்மஜாவின் சகோதரரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரனிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகுவதாக கிடைத்த தகவலுக்கு பிறகு பத்மஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜ.க.வில் தான் இணைவதாக வெளியான செய்திகள் போலியானவை. தான் நகைச்சுவையாக பேசியதாக தனது முகநூலில் பத்மஜா கருத்து வெளியிட்டார். சிறிது நேரத்தில் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். எனவே அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தில் பத்மஜா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பத்மஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அம்மாநில காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • 'அயலான்’ படத்தில் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
    • சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

    நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து நாளை வெளியாக இருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.


    நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பேசியதாவது, சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா.


    அதேபோல, இயக்குனர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரகுமானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக, குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக 'அயலான்' வந்துள்ளது என்றார்.


    'அயலான்' தவிர நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, '96' புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் 'சூது கவ்வும் 2' மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'குற்றச்சாட்டு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.

    ×