search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thentiruperai"

    • சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
    • மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67 லட்சம் பங்களிப்புடன் புதிய தாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாக்கியலீலா, நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்று பேசினார். விழாவில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பார்த்தி பன், தி.மு.க. ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், வட்டாரத் தலை வர்கள் ஆழ்வை கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிர மணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்து மாலை, யூனியன் துணைத் தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, தொடக்கப் பள்ளி ஜான்சன் ஊடக பிரிவு முத்துமணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பால கிருஷ்ணன், குமரன், இசக்கி ராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடம்பாகுளத்தில் தமிழக அரசால் நடைபெற்று வரும் கரை மற்றும் மடை சீரமைப்பு பணிகளை மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி தலைமையில் ஆய்வு செய்தனர்.
    • மழை காலத்தில் குளத்தின் கரை உடைவதற்கு முன்பாக குளத்தின் உள்பகுதியில் இருந்து மண் எடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று மள்ளர் பேராயம் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வை சுற்று வட்டார பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் கடம்பாகுளத்தில் தமிழக அரசால் நடைபெற்று வரும் கரை மற்றும் மடை சீரமைப்பு பணிகளை மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி தலைமையில், கடையனோடை மதகு மற்றும் கரைகள் புதிதாக கட்டியுள்ள மடை எண்.05 மற்றும் 07 தூத்துக்குடி தெற்கு மாவட்ட மள்ளர் பேராயம் செயலாளர் குலசை சரவணன், மாநில துணை பொதுசெயலாளர் மோசஸ் பாண்டியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன், கடம்பாகுளம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் உத்திரம், மள்ளர் பேராயம் பொன் மயில், விவசாயிகள் கடம்பா சேனா, முருகன் மற்றும் மள்ளர் பேராயம் நிர்வாகிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மேலும் கடம்பா குளம் மடைகள் மற்றும் கரைகளை மழை காலத்தில் குளத்தின் கரை உடைவதற்கு முன்பாக குளத்தின் உள்பகுதியில் இருந்து மண் எடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று மள்ளர் பேராயம் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 8.30 மணிக்கு பூர்ணாகுதி, 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமிகள் ஆதிநாதர் ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 7 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், அர்ச்சகர்கள் கண்ணன், விவேக் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை பாலாஜி, பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

    புனிதநீர்

    இதையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடை பெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    முத்துமாலை அம்மன்

    முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் அன்னதானம் நடை பெற்றது.வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • இன்று காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் சுவாமி நம்மாழ்வார் அவதார திருவிழா தொடங்கியது.
    • ஜூன் மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) 9-ம்நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி திருநட்சத்திரத்தில் அவதரித்ததை முன்னிட்டு ஆண்டு தோறும் பிரமோத்சவ விழா 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கொடியேற்றம்

    சுவாமி நம்மாழ்வார் அவதார விழாவை முன்னிட்டு இன்று காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் சுவாமி நம்மாழ்வார் அவதார திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் தங்கதோளூக்கினியன் வீதி புறப்பாடும், மாலையில் இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, புன்னை மரவாகனம், தங்க திருப்புளி வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா நடக்கிறது.

    கருடசேவை

    28-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்கள் கொடி, குடை, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக நவ திருப்பதி எம்பெருமான்களை மங்களாசாசனம் வரவேற்க பூப்பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று இரவு 9 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி உற்சவரான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நம்மாள்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    ஜூன் மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) 9-ம்நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் நடைபெறுகிறது. 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலையில் நடக்கிறது.

    கொடியேற்ற விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், எம்பெருமானார் பேரருளாளர், ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் காரிமாறன், கலைக்காப்பக தலைவர் ரெங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பேரூராட்சி பஸ் நிறுத்தம் கால்நடை மருத்துவமனை அருகில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூ ராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், நகர செயலாளர் முத்துவீரப் பெருமாள், மாவட்ட பிரதிநிதி செங்கோட்டை யன், ஒன்றிய பிரதிநிதி சமுத்திரராஜ், அவைத்தலைவர் சுப்பையா, துணை தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சீதாலட்சுமி, மாரி யம்மாள், வார்டு செயலாளர்கள் ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், ஞானப்பிரகாசம், பொன்ராஜ், முருகன், அன்பு துரை, ரவிக்குமார், ராஜேந்தி ரன், மேகநாதன், முத்துமாலை, செல்வராஜ், செல்லையா, சுவிசேஷ முத்து, தங்கராஜ், முத்துகிருஷ்ணன், சுப்பிர மணியன், சுப்பையா, ஜெயகோபால், மனுவேல், மோசஸ் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இசக்கி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நெல்லை- திருச்செந்தூர் செல்லும் பிரதான மெயின் ரோட்டில் புதிய இடத்தில் சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேலான இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் மணிகண்ட பட்டர், ஆறுமுகநாத பட்டர் தலைமையில் மங்கல இசை, எஜமான சங்கல்பம், தேவதா அனுக்கை, வேத ஆகம முறைப்படி கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுதர்சன பூஜை, மகாலட்சுமி பூஜை, கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை, கடம்பரப்பாடு, ஆலய வலம் வருதல், யாகசாலையிலிருந்து மற்றும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இசக்கி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.
    • இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய் கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு காலை முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரம், விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து விநாயகர், நாராயணர், அம்மன்கள், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மதியம் நடைபெற்ற பூஜையின் போது முத்துமாலை அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும், நேர்த்தி கடன் செலுத்தியும் முத்துமாலை அம்மனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோ ருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த முத்துமாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், செல்வராஜ், கேசவமூர்த்தி, முத்துலிங்கம், பிரகாஷ்,ஈஸ்வரன், ஜெயசங்கர், முத்துகுமார், பெரியசாமி, கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன், பாலகிருஷ்ணன், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் எராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் பரிசு தொகை வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் இரண்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பரிசு தொகை வழங்கினார். பின்னர் சலவை தொழிலா ளர்களுக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார்.

    இதை தொடர்ந்து தென்திருப்பேரையில் வருவாய் துறை அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பையும், மேல கடம்பாவில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், திருச்செந்தூர் கோட்டா ச்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வருவாய் அலுவலர் முத்து ராமன், தென்திருப்பேரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரமேசு பாபு, இளநிலை உதவியாளர் சேக்அகமது,

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தென்தி ருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், அவைத் தலை வர் மகரபூஷணம், தென் திருப்பேரை நகரச்செயலாளர் முத்துவீரப்பெருமாள், தென்திருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஆனந்த், ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், நகர அவைத்தலைவர் சுப்பையா, ஆழ்வை மத்திய ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமிர்தவள்ளி துரைராஜ், மாவட்ட பிரதிநிதி பாலச்சந்திரன், தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், ஒன்றிய தொண்டரணி ராஜேஷ், ஒன்றிய பிரதிநிதி சந்தானமுத்து, கிளை செயலாளர் மாரிமுத்து, கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி மாரியம்மாள், சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் மோகன், ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், முருகன், அன்புத் துரை, கல்லை ராஜேந்திரன், ஞான பிரகாசம், பொன்ராஜ், கடம்பாரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லையா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
    • தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.

    இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் குருகாட்டூர், கோட்டூர், மேலகடம்பா, கல்லாம்பாரை, தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவை செய்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் கொடுத்து பயனடையலாம்.

    தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் கோவில்துரை, நகர செயலாளர் முத்து வீர பெருமாள், கவுன்சிலர் ஆனந்த், நுகர் பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் இசக்கி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×